• Breaking News

    நடிகை ரோஜா மீது ரூ.100 கோடி ஊழல் புகார்.....

     

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தல் நடந்த போது சட்டமன்ற தேர்தலும் நடந்தது. அந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆக பதவியேற்றார். இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் விளையாட்டுத் துறை மந்திரியாக நடிகை ரோஜா இருந்தார்.

    அந்த சமயத்தில் மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டி நடத்துவதற்காக ரூ 110 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் நடிகை ரோஜா ரூ.100 கோடியை ஊழல் செய்ததாக விளையாட்டு அமைப்பு ஒன்றிய தலைவர் பிரசாத் கடந்த ஜூன் 11ஆம் தேதி மாநில அரசுக்கு புகார் கொடுத்தார்.இவர் கொடுத்த புகாரின் பேரில் விஜயவாடா காவல் துறையினருக்கு விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 

    இதைத்தொடர்ந்து மாநில அளவிலான நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியது, விளையாட்டு கருவிகள் வழங்கியது போன்றவற்றை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ரோஜா விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று பேசப்படுகிறது.

    No comments