நடப்பாண்டிலும் பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்..... தமிழக அரசு அறிவிப்பு
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று பெண் காவலர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என்றும் மகப்பேறு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் பணி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு தமிழக அரசு ஆட்டோ வழங்க மானியம் வழங்கவுள்ளது.இதற்கான அரசாணை அடுத்த வாரம் வெளியாகும்.
அதாவது சுய தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த திட்டமானது கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் கடந்த வருடம் 500 பேருக்கு ஆட்டோ வாங்க ஒரு லட்ச ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடப்பாண்டிலும் ஆட்டோ வாங்குவதற்கு மானியம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் அதன்படி பெண்கள் மற்றும் திருநங்கைகள் உட்பட 1000 பேருக்கு ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்சம் மானியம் வழங்கப்பட இருக்கிறது.
No comments