இன்றைய ராசிபலன் 05-08-2024
மேஷம் ராசிபலன்
நீங்கள் வாழ்க்கையையினையும், அதன் சிக்கல்களையும் மிக ஆழமாகத் தேடிப் பார்த்த நேரங்கள் உள்ளன. மாற்ற வேண்டிய நேரம் இதுவாகும். கொட்டிய பாலைப் பற்றி கவலைபடாமல், வாழ்க்கையை வளமாக்கும் நேரம் இதுவாகும். நன்றியுணர்வு என்பது நீங்கள் மறந்துவிடுகின்ற ஒன்று. இது உங்கள் வாழ்க்கையில் மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தும். நீண்ட காலத்திற்கு முன்பு உங்களுக்கு உதவிய நபர்களுடன் மீண்டும் பழகுங்கள். எங்கள் வார்த்தையினைப் பின்பற்றினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்!
ரிஷபம் ராசிபலன்
நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பதன் மூலம், அதுவும் இடைவெளி இல்லாமல் உழைப்பதன் மூலம், உங்கள் மதிப்பை நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள். அதற்கு, யாருடைய ஒப்புதலும் உங்களுக்கு தேவையில்லை. உங்களுக்கு நீங்கள் மட்டுமே போட்டியாளர். அவ்வப்போது, ஒரு முறை ஓய்வு எடுப்பதற்கு நினைவிற் கொள்ளுங்கள். மிகவும் கஷ்டத்தில் இருக்கும் போது கூட, நீங்கள் நல்லது செய்யவே விரும்புகிறீர்கள். முன்னேறுங்கள். நீங்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். மேலும், இது எதிர்மறை சிந்தனையிலிருந்து உங்கள் மனதை மாற்றிவிடும்.
மிதுனம் ராசிபலன்
வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே உங்கள் விமர்சன சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு, வெற்றியை நோக்கி பணியைத் தொடருங்கள்! இதற்காக சில வெகுமதிகள் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். நீங்கள் தனிமையில் இருப்பதை உணர்கிறீர்கள், இந்நிலையில், உங்களை உண்மையாக நேசிக்கும் அல்லது கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்பதை நம்புவது கடினமாகவே இருக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் பழைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ள உங்களுக்கு நேரம் கிடைக்கலாம், ஏனென்றால் இன்று உங்களுக்குத் தேவையான மகிழ்ச்சியைக் கொண்டுவர அவர்கள் உதவக்கூடும்.
கடகம் ராசிபலன்
கடந்த காலங்களில், உங்கள் இதயம் பலமுறை நொறுங்கிப் போய்விட்டது. இதனால், ‘உண்மையான அன்பு’ என்னும் கருத்தை நீங்கள் இனி நம்பப்போவது இல்லை. மேலும், இதுவே உங்களுக்கு மிகவும் சர்வசாதாரணமாக பழகிப்போய்விட்டது. விரைவில், உங்கள் மனம் கவர்ந்த ஒரு நபர் உங்களை ஆக்கிரமித்துள்ள தடைகளை அகற்றி, உங்களை மிகவும் இலகுவாக உணரச்செய்வார். அப்போது, முன்பை விட பலமடங்கு பரபரப்பாக இயங்குவதை நீங்கள் உணர்வீர்கள். ஆகவே, நீங்கள் விரும்பி கேட்பதெல்லாம் யாதெனில், கடினமான சூழ்நிலைகளை கொண்ட நாட்களின் முடிவில், கொஞ்சம் அமைதியும், நிம்மதியும் தான். இச்சூழலில், உங்கள் எதிர்பார்ப்பை மற்றவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக, நீங்கள் உண்மையிலேயே பேசவேண்டியிருக்கும்.
சிம்மம் ராசிபலன்
நீங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி குழப்பமடையக்கூடும். சந்தேகம் ஏற்பட்டால், உங்களது நலம் விரும்பியிடமோ அல்லது உங்களது நெருங்கிய நண்பர்களிடமோ உதவி கேட்க வெட்கப்பட வேண்டாம். உங்களது வேலையானது உங்கள் நேரத்தை நிறைய ஆட்கொண்டுவிட்டது. மேலும், இது நிச்சயமாக உங்களை அதிக கவனம் செலுத்த வைத்துள்ளது. இளைப்பாறுதல் என்பது உங்களது வேலையைப் போலவே முக்கியமானது ஆகும். மேலும், இந்த சமயம் தான் நீங்கள் உங்களது உடலில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் ஆகும். அத்தகைய நெருங்கிய நண்பர்களைப் பெறுவதற்கு நீங்கள் தான் பாக்கியவான்கள். மேலும், அவர்களுக்கு நீங்கள் தான் ‘உலகம்’. உங்களது பாராட்டுதல்களை அவர்களுக்கு சமிக்கைகளாக காண்பிப்பதில் உறுதியாக இருங்கள்.
கன்னி ராசிபலன்
உங்கள் உணர்வுகள் கட்டுப்பாடில்லாமல் இயங்குகின்றன. மேலும், நீங்கள் இதை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். மனஅழுத்தம் என்பது உங்கள் சக்தியை பெருமளவில் வீணடிக்கும் ஒரு நிலை ஆகும். உங்கள் நிலையினை தாழ்த்தும் செயல்களை வேறுபடுத்தி, அதனை புரிந்துகொள்ளுங்கள். இது கடந்த காலங்களில், நீங்கள் மற்றவர்களுக்கு செய்த தவறுகள், அல்லது ஏமாற்றம் சார்ந்தவையாகக் கூட இருக்கலாம். அத்தகைய சிக்கல்களிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை நீங்கள் கண்டறியுங்கள்.
துலாம் ராசிபலன்
இன்றைய சூழலில், ‘உடலின் நச்சுக்களை சுத்திகரித்தல்’ என்பது நீங்கள் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று ஆகும். சில காலமாக, உங்களது உடல் நலனைப் புறக்கணித்து வருகிறீர்கள். உங்களது உடல்நலம் சார்ந்த விஷயங்கள் முன்னுரிமைப் பட்டியலில் இல்லாத போதிலும், அதனைக் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். உங்களது உள்ளார்ந்த ஆர்வம், திறமை போன்றவற்றால் மற்றவர்களுக்கு என்ன நன்மை என்பதை கண்டறியுங்கள். இன்று, உங்களது மனதோடு உரையாட பயப்பட வேண்டாம். உங்களிடம் சில நல்ல புத்தாக்க யோசனைகள் உள்ளன. அதைச் செய்வதற்கான தைரியத்தை நீங்கள் வரவழைக்க வேண்டும்.
விருச்சிகம் ராசிபலன்
வாழ்க்கை சில நேரங்களில் உங்களுக்கு ஒரு இழுபறியாகத் தோன்றுகிறது. எனவே, உங்களுக்கு ஒரு மாற்றம் தேவை. இந்த வழியில், உங்கள் உள்மனத்தில் தோன்றும்விஷயங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம். உங்கள் வாழ்க்கையில் முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க முயற்சி செய்யுங்கள். இது முக்கிய விஷயங்களைவிரைவாகச்செய்ய உதவும். புதிய யோசனைகள் உங்கள் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடலாம். மேலும், அவற்றைச் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள உங்கள் மனதைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
தனுசு ராசிபலன்
நீங்கள் வழக்கமாகவே, புத்திசாலித்தனமாகவும் தெளிவாகவும் இருப்பீர்கள், ஆனால், இன்று உங்கள் மனதின் செயல்பாடு தடை கொண்டதாகவும், தெளிவற்றதாகவும் தெரிகிறது. மனக்கிளர்ச்சி நிறைந்த பாதையில் விலகி இருங்கள். இல்லையெனில், இது வாழ்க்கையின் நோக்கத்திலிருந்து, உங்களிடமிருந்து தடம் மாறச் செய்துவிடும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் சமூக தொடர்புகள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் எந்த நிதி முடிவுகளையும் முயற்சிகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது.
மகரம் ராசிபலன்
இன்று, நீங்கள் சலிப்படைந்தது போன்று உணர்கிறீர்களா? உங்கள் வாழ்வை எப்படி மேம்படுத்துவது என்று யோசித்து வருகிறீர்கள். இதை யோசிக்க இப்போதே சிறந்த நேரமாக இருக்கும். மற்றவர்களின் யோசனைகள் மற்றும் அவர்களின் அனுபவங்களை பயன்படுத்துவது உங்களுக்கு போதுமானதாக இருக்காது. உங்கள் மூளையை கசக்கி பிழிந்து, ஆழமாக யோசித்து, உங்களுக்கான யோசனையை தேர்ந்தெடுக்க வேண்டும். இது என்னால் முடியாது என்று சாக்குபோக்கு சொல்வது உங்களுக்கு எப்போதும் உதவாது. ஆகையால், இன்று உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான நேரம். எனவே, முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
கும்பம் ராசிபலன்
வெளியே சென்று, நிறைய கற்றுக்கொள்ளுங்கள். இன்று, அதைத்தான் நீங்கள் செய்யவேண்டும். மழுங்கலான திறன்களைக் கூர்மைப்படுத்துங்கள். மேலும், நீங்கள் விரும்புகின்ற அல்லது சிறந்து விளங்குகின்ற ஒரு திறனை, ஆகச்சிறந்ததாக மாற்ற முயற்சி செய்யுங்கள். மன உறுதியோடு இணைந்த ஆர்வமானது, உங்களுக்கு நல்ல தொடக்கத்தைத் தரும். கற்றுக்கொள்வதற்கான நிறைய வாய்ப்புகள் உங்கள் வழியில் வருகின்றன. உங்களைப் பயன்படுத்திக்கொள்ள காத்திருக்கும் நபர்களிடத்தில் எச்சரிக்கையாக இருங்கள். அத்தகைய நபர்களிடமிருந்து விலகி இருப்பதற்காக, உங்களது உள்ளுணர்வு மற்றும் மனதின் தீர்ப்பைப் உபயோகியுங்கள்.
மீனம் ராசிபலன்
ஒரு நேர்மறையான நபரான நீங்கள், ஏதாவது ஒன்றை இழப்பதை உண்மையிலேயே வெறுக்கிறீர்கள். வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும், நீங்கள் சிலசமயம் வெற்றி பெறுகிறீர்கள். சிலசமயம் தோல்வியுறுகிறீர்கள்! உங்களது வெற்றியோ அல்லது ஏதாவது ஒன்றை செயல்படுத்தும் உங்கள் செயலோ, உங்கள் திறன்களை தீர்மானிக்க விடவேண்டாம். உங்கள் ஆற்றலும், அழகும் இன்றைய சிக்கல்களை சரிசெய்ய உதவும். ஒருவேளை, நீங்கள் இதனை கடுமையாக எடுக்காவிட்டாலும், நீங்கள் இருதரப்பினருக்கு இடையே ஒரு மத்தியஸ்தராக செயல்பட வேண்டியிருக்கும். கவலை உண்மையில் உங்களை மென்மேலும் பயமுறுத்தியுள்ளது. எப்போதும் உங்கள் உற்சாகத்தைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். அதிகம் கவலைப்படுவதற்கும் அதன் மூலம் உங்கள் நாட்களை இழப்பதற்கும் பதிலாக, எந்த செயல்கள் நடந்தாலும் அவற்றைக் அதன் வழியிலே கையாள்வதைத் கற்றுக்கொள்ளுங்கள்.
No comments