• Breaking News

    FASTAG ஒட்ட தெரியாமல் ஒட்டினால் இரட்டை கட்டணம்..... மத்திய அரசு அறிவிப்பு

     

    இந்தியாவைப் பொறுத்த வரையில் வாகனங்களில் பாஸ்டேக் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட இதன் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் வாகனத்தில் FASTag- ஐ முறையாக பொருத்தாத பயணர்களிடமிருந்து இரண்டு மடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், சிலர் வாகன கண்ணாடிகளில் FASTag முறையாக பொருத்தாததால் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தால் பிறருக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. இதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

    No comments