• Breaking News

    பிரபல CAMLIN நிறுவனர் காலமானார்…..

     

    இந்தியாவின் ஸ்டேஷனரி தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கேம்லின் திகழ்கிறது. இந்த நிறுவனம் கடந்த 1946 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதன்பின் கடந்த 1998 ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது.

     இந்நிறுவனம் 93 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் கேம்லின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் நேற்று உடல் நல குறைவினால் திடீரென காலமானார். அவர் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 85. இவர் கேம்லின் ஜாமென்ட்ரி பாக்ஸ் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    No comments