• Breaking News

    இந்தி படத்தில் மீண்டும் நடிக்கிறாரா நடிகை திரிஷா...?

     

    நடிகை திரிஷா நடிப்பில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் 2, தி ரோடு, லியோ ஆகிய படங்கள் வந்தன. தற்போது தமிழில் விடாமுயற்சி, தக் லைப், தெலுங்கில் விஸ்வம்பரா, மலையாளத்தில் ராம், ஐடன்டிட்டி ஆகிய படங்கள் கைவசம் வைத்து நடிக்கிறார். இந்த நிலையில் இந்தி படமொன்றில் நடிக்க திரிஷாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. 

    இயக்குனர் விஷ்ணுவர்தன் இந்தியில் சல்மான்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவிடம் பேசி வருகிறார்கள். ஏற்கனவே 2010-ல் வெளியான கட்ட மீட்டா இந்தி படத்தில் அக்சய் குமார் ஜோடியாக திரிஷா நடித்து இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதனால் இந்தி படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதில் திரிஷா நடிப்பார் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள். படப்பிடிப்பு விரைவில் ஸ்பெயினில் தொடங்க உள்ளது.

    No comments