• Breaking News

    டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசர அவசரமாக ரஷியாவில் தரையிறக்கம்

     

    தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 225 பயணிகள், 19 விமான ஊழியர்கள் என மொத்தம் 244 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்டு சில மணிநேரங்களில் ரஷிய வான்பறப்பில் பறந்துகொண்டிருந்தது.

    அப்போது, எதிர்பாராத விதமாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையறிந்த, விமானி உடனடியாக ரஷிய விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ரஷியாவின் ரஷ்னொயர்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசர அவசரமாக தரையிறக்கபட்டது.

    இதையடுத்து, மாற்று விமானம் மூலம் பயணிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    No comments