அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் விசிட்
தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு பழுதடைந்த நிலையில் உள்ள பாத்திரங்கள் மற்றும் கருவிகளை மாற்றுமாறு முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில் அம்மா உணவகங்களை சீரமைப்பதற்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆட்சிக்காலத்தில் 388 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்ட நிலையில் அதன்மூலம் தினசரி 1.50 லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள்.
அதன் பிறகு இந்த உணவு உங்களுக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை மற்றும் காய்கறி போன்ற அத்தியாவசியமான பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக வழங்கப்படும். கடந்த 3 வருடங்களில் அம்மா உணவகங்களை சீரமைக்க பல கோடி ருபாய் செலவிடப்பட்டுள்ளது. இப்படி நிதி ஒதுக்கப்படுவதன் மூலம் அம்மா உணவகங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும் அம்மா உணவகத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள பணியாளர்களுடன் கலந்துரையாடியதோடு உணவின் தரம் போன்றவற்றை சோதனை செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments