• Breaking News

    தாம்பரத்தில் தமிழக அரசை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

     

    ஒரே ஆண்டில் தமிழகத்தில் மூன்று முறை மின் கட்டண உயர்வு நியாய விலை கடைகளில் பருப்பு பாமாயில் வழங்குவதை நிறுத்துவதற்கு தமிழக அரசு பரிசீலித்து வருகிறது விவசாயிகளுக்கு  காவிரி நீரை பெற்றததை கண்டித்து சென்னை அடுத்த தாம்பரம்   செங்கல்பட்டு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

      ஆர்ப்பட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட கழக துணைச் செயலாளர் மா.செழியன், மாவட்ட அவைத் தலைவர் இரா.ஆனந்தராஜ், தாம்பரம் மேற்கு பகுதி செயலாளர் மார்க்கெட் ஞானப்பால், தாம்பரம் தெற்கு பகுதி கழகச் செயலாளர் கேட் எம்.தர்மா, மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஊரப்பாக்கம் எம்.ஜி.மூர்த்தி, அனகாபுத்தூர் நகர செயலாளர் மகாதேவன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நாகராஜ் உட்பட  ஏராளமானோர்  கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷம் எழுப்பினர் இதில் 500க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    No comments