ஷூவிற்குள் பதுங்கியிருந்து படமெடுத்த பாம்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்து படம் எடுக்கும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது. வட மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. இது போன்ற காலத்தில் பாம்பு போன்ற உயிரினங்கள் பாதுகாப்பான இடங்களை தேடி மனித குடியிருப்புகள் புகுந்து விடுவது வழக்கம் .அந்த வகையில் ஒரு வீட்டின் வராண்டா பகுதியில் காலணிகள் வைக்கும் ஸ்டாண்டின் உயரமான இடத்தில் தான் அந்த ஷூ வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பது அந்த வீட்டில் உரிமையாளர் பார்த்து அதிர்ச்சியடைந்து பாம்பு பிடி வீரரை அழைத்துள்ளார். அவர் வந்து பாம்பை பிடிக்க குச்சியை நீட்டியபோது அதில் பதுங்கி இருந்த பாம்பு சீறியபடி வெளியே வந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .சுமார் 30 லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்வையிட்டு உள்ளார்கள்.
No comments