கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு அரசு மரண தண்டனை வழங்க வேண்டும்...... தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா பேட்டி
தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் 16.08.24ம் தேதியில் 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை சார்பில் சேலத்தில் மாபெரும் மாநில மாநாடு நடத்துவது குறித்து முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநாடு குறித்த கருத்துக்களும் மாநாடு அன்று செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலத்தில் இருந்தும் ஏராளமான தேசிய செட்டியார்கள் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் 24 மணி தெலுங்கு செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா பத்திரிக்கையாளர்கள் சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில் ...
எதிர்வரும் 16.8.24 தேதியானது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய தாகவும், இத்தகைய தேதி உள்ள 16ம் தேதி 16 மனையும் 8-ம் மாதம் என்பது 8 மனையையும் 24-ம் வருடம் எங்களுடைய 24 மனை தெலுங்கு செட்டியார்கள் உறவின் முறையை குறித்ததாக இத்தகைய தேதி அமைந்துள்ளது.
இதை போற்றும் விதமாகவும், எங்களது 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சார்பாகவும், பேரவையில் நூற்றாண்டு விழா சேலத்தில் நடைபெற உள்ளதாகவும்,இந்த மாநாடு தங்களது பேரவையில் உள்ள உலகமெங்கும் உள்ள 24 மனை செட்டியார்களை ஒன்று திரட்டி மாநாடு நடத்த இருப்பதாக தெரிவித்தார்.
இந்த மாநாடு அரசியல் மாற்றத்திற்கு தங்களது பேரவை அரசியலில் முக்கிய பொறுப்புகள் வகிக்க வேண்டும் என்று அரசுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் அமைய உள்ளது எனவும், மேலும் எங்கள் அமைப்பின் சார்பாக மத்திய அரசுக்கு கோரிக்கைகளாக திண்டுக்கல் முதல் குமுளி வரையிலான ரயில் சேவையை செயல்படுத்தி விடவும், முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் நிறுத்திடவும்,வரலாற்று சிறப்புமிக்க கண்ணகி கோவிலை முயற்சியில் ராமர் கோயில் கட்டி சிறப்பு செய்தது போல் சீரமைத்து மக்கள் வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானமாக கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.
மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனவும், கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு அரசு ஆயில் தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளனர் ஆனால் அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும், மேலும் காவல்துறையினரையும் பணியிடை நீக்கும் செய்யாது பணி நீக்கம் செய்திடவும் வேண்டும் என்றால்.
இந்த தமிழகத்தில் கள்ளுக்கடைகளை கேரளாவை போன்று திறக்க வேண்டும். கள்ளுக்கடைகள் திறந்தால் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தனது பேட்டியில் கூறினார்.
No comments