ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்...?
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தற்போது அந்த பொருட்களையும் சேர்த்து ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் மின்கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.இதனைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 2கோடியே 21 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.
தற்போது வெளிச்சந்தையில் விலை உயர்ந்துள்ளதால் ரேஷனில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விலை உயர்த்தப்படும் என தெரிகிறது. இருந்தாலும் அரசு தரப்பில் இருந்து இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
No comments