• Breaking News

    ஆவின் பால் விலை குறைக்க வாய்ப்பே இல்லை - அமைச்சர் தகவல்

     

    தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர வாய்ப்புள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இது மக்களை பெரிதும் பாதித்தது. தற்போது மீண்டும் ஆவின் பால் விலை உயர உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இப்போதைக்கு ஆவின் பால் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

    விலை உயர்த்துவது குறித்து நுகர்வோர்களிடமும் முதல்வரிடமும் ஆலோசித்து வரும் காலங்களில் உயர்த்தப்படலாம் என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவில் எங்கும் இந்த அளவு குறைவான விலைக்கு பால் கிடைப்பதில்லை. எனவே விலை குறைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.இதனால் இனி வரும் காலங்களில் ஆவின் பால் விலை உயர்வும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    No comments