ஓமன் கடல் பகுதியில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்.... இந்தியர்களை தேடும் பணி தீவிரம்.....
ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. “பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற எண்ணெய் டேங்கர் கடலில் தலைகீழாக மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெய் கசிவு உள்ளதா என்பதை ஓமன் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இந்த கப்பலில் பயணம் செய்த 13 இந்தியர்களும், மூன்று இலங்கையை சேர்ந்தவர்களும் ஆவார்கள் என்று ஓமான் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இவர்களின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் இந்தியர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
No comments