விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காதலித்து திருமணம் செய்த மெக்கானிக்கை மனைவியின் சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கார்த்திக் பாண்டி (26) சிவகாசியில் வேலை செய்தபோது அதே பகுதியில் உள்ள நந்தினி (22) என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி 8 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டார். இந்த நிலையில் நேற்று (ஜூலை 24) கார்த்திக்கை நந்தினியின் சகோதரர்களான பாலமுருகன், தனபாலன் மற்றும் அவர்களின் நண்பர் சிவா ஆகியோர் கொலை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்த பாலமுருகன், தனபாலன் மற்றும் சிவா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய நிலையில் தலைமறைவாக இருந்த இவர்களை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தற்போது மூன்று கொடூரர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
0 Comments