“பச்சையப்பா கல்லூரி மாஸ்” ரயிலில் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தங்களது கல்லூரிக்கு செல்ல பஸ் மற்றும் ரயில் களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்ட்ரல் செல்லும் ரயிலில் ஒரே பெட்டியில் ஏறியுள்ளனர்.
பின் ரயில் புறப்பட்டதும் இவர்கள் ரகளை செய்வதோடு, சில மாணவர்கள் ஜன்னலில் ஏறியும் கூச்சலிட்டனர். இதைத்தொடர்ந்து ரயில் பெட்டியின் வாசலில் தொங்கிக்கொண்டு “பச்சையப்பா கல்லூரி மாஸ்” என்ற சத்தம் விட்டு பயணம் செய்கின்றனர்.இதனால் அந்த அந்த ரயில் பெட்டியில் இருக்கும் மற்ற பயணிகள் கடும் அவதி அடைந்தார்கள். இதனை தட்டிக் கேட்கும் பொதுமக்களிடம் மாணவர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது மாணவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் ரயிலில் பயணம் செய்கின்றார்கள். மேலும் இப்படி ரகளையில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
No comments