கல்லூரி கேண்டீன்களில் இதை விற்பனை செய்ய தடை - யுஜிசி உத்தரவு
பல்கலைக்கழகம் மானிய குழு தலைவர் மணிஷ் ஆர். ஜோஷி உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் ஒரு முக்கிய சுற்றரிக்கையை அனுப்பியுள்ளார். அதில், நாட்டில் 4-ல் ஒருவருக்கு உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு முந்தைய அறிகுறிகள் இருப்பதாக ஐசிஎம்ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் ஆரோக்கியத்தை கல்வி நிறுவனங்களில் காக்க வேண்டியது மிகவும் அவசியம்.இந்நிலையில் கல்லூரி கேன்டீன்களில் இனி ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. இந்த விதிமுறையை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதீத கொழுப்பு, அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், உப்பு மற்றும் சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களின் பயன்பாட்டை வெகுவாக குறைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments