• Breaking News

    திருவஞ்சேரி தொடக்கப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் எஸ்.ஜே.பனிமயம் பெர்னாண்டோ அவர்களுக்கு விருப்ப ஓய்வு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது


    திருவஞ்சேரி தொடக்கப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் எஸ்.ஜே.பனிமயம் பெர்னாண்டோ அவர்களுக்கு விருப்ப ஓய்வு பணி நிறைவு பாராட்டு விழா மாலை 4 மணி அளவில் நடைபெற்றது நிகழ்ச்சியில் திருவஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஜனனி சுரேஷ் பாபு,  துணைத் தலைவர் திருமதி ருக்மணி சக்தி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நாகலிங்கம், பழனிச்சாமி, திருமதி செல்வி பாபுஜி, திருமதி சூரியா பொன் வேல், அரசு அதிகாரிகள் ஆசிரிய பெருமக்கள்  முன்னாள் மாணவர்கள் மனோகரன், சுரேஷ் பாபு, ராம் கணேஷ், மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு பாராட்டி வழி அனுப்பி வைத்தனர்.

    ஆசிரியராக பணியாற்றிய எஸ்.ஜே.பனிமயம் பெர்னாண்டோ தலைமை ஆசிரியர்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருவஞ்சேரி புனித தோமையார் மலை ஒன்றியம் 17 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராக,16 ஆண்டுகள் தலைமை ஆசிரியராக,ஆக 33 ஆண்டுகள் பணி நிறைவு செய்து விருப்ப ஓய்வு பெற்றார்.2020-2021 கல்வி ஆண்டில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசால் இவருக்கு வழங்கப்பட்டது.

    2012 ஆம் ஆண்டு இவர் திருவஞ்சேரி பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி ஏற்ற போது 7 ஆசிரியர்கள் பணிபுரிந்த நிலையில், தற்போது இப்பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்ற குறிப்பிடத்தக்கது.

    No comments