• Breaking News

    நாகை: வணிக நிறுவனத்தில் குடிநீர் பாட்டிலில் புழு, உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை


     நாகப்பட்டினம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் செயல்படும் ஒரு வணிக நிறுவனத்தில் ( பெட்டிக்கடை  ) வாங்கிய அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் புழு இருப்பதாக வந்த புகாரையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை நாகப்பட்டினம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் அவர்கள் உத்தரவின்படி இன்று ( 30.07.24 ) அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை பதிவுச் சான்று பெறப்பட்டிருக்கிறது. 

    குடிநீர் பாட்டில்கள் ஆய்வு செய்யப்பட்டது. தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட விபரங்கள் இருந்தன. பாட்டில்களில் வேறு எந்த ஒரு அந்நியப் பொருட்களும் கண்டறியப்படவில்லை. அதேபோல் அதன் மொத்த விநியோகம் செய்யும் நிறுவனத்திலும், அந்த குறிப்பிட்ட கம்பெனியின் சப்ளை வாகனமும் பரிசோதனை செய்யப்பட்டது. 

    உணவு பாதுகாப்புத்துறை உரிமம் இருந்தது. தயாரிப்பு விபரங்கள் இருந்தன. வேறு அந்நியப் பொருட்களும் கண்டறியப்படவில்லை. வருகின்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்களை இயன்றவரை பார்த்து கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்க அறிவுரை வழங்கப்பட்டது. 

    அதேபோல் புகாருக்கு உள்ளான நிறுவனம் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி-யில் செயல்படுவதால் அதனை ஆய்வு செய்ய சம்மந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    No comments