திருப்பத்தூர் மாவட்டம் கே.எம்.சாமிநகர் பகுதியில் ஜெகன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வருடத்திற்கு ஒருமுறை திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி அவர் ஆடி மாதத்தை முன்னிட்டு முருகனை தரிசிப்பதற்காக விரதம் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆடி கிருத்திகையான நேற்று ஜெகன் காவடி எடுத்துக்கொண்டு அவரது குடும்பத்தினருடன் திருத்தணி முருகனை தரிசிப்பதற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அதன்பின் ஜெகன் திடீரென அவரது குடும்பத்தினரை விட்டு விட்டு பேருந்திலிருந்து பாதியிலேயே இறங்கி வீடு திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த அவர் ஆம்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றார்.
அப்போது அவ்வழியே ரயில் ஒன்று வந்துகொண்டிருந்த நிலையத்தில் திடீரென ஜெகன் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவராகள் உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments