சேலத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் இனியன். 32 வயதான இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சௌமியா என்ற பெண்ணை காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டா.ர் பிறகு கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வசித்து வந்த நிலையில் இனியன் மருத்துவ பயிற்சிக்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அப்பொழுது சௌமியாவுடன் யார் வீட்டில் தங்குவது என்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து சௌமியா இரவு தனி அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மனைவி இறந்த சோகத்தில் இருந்த இனியனும் அன்றைய தினமே வெறும் ஊசியை உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். அதன் பிறகு இரண்டாவது முறையாக விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அவருடைய அறையில் தூங்க சென்ற நிலையில் காலை வெகுநேரமாய் வெளியே வராததால் பெற்றோர்க உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மகன் இனியன் வெறும் ஊசியை உடம்பில் செலுத்தி இறந்து கிடந்துள்ளதை பார்த்து கதறியழுத்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments