• Breaking News

    தாம்பரம் சண்முகம் சாலையில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்


    செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா,  முன்னாள் எம்எல்ஏ தன்சிங்,கனிதா சம்பத், செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் கஜா (எ) கஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் என்.சி கிருஷணன்,பெரும்பாக்கம் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 

    ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணம் உயர்வு,நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பாமாயல், பருப்பு,உள்ளிட்டவை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசு கண்டித்து  ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம் மக்கள் நலனை முன்னிறுத்தம் ஆர்ப்பாட்டம் என கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பகுதி செயலாளர் எல்லார்.செழியன், கூத்தன், கோபிநாதன், பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.பி மனோகரன், மற்றும் முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர், கணேசன், ஆதிகேசவன், தவமணி, ராஜேந்திரன், கேசவன், கலை, மூர்த்தி, திருமலை ,தாஸ், முருகன், விஜயா கணேஷ், சிவா, ரமேஷ், சற்குணம், ஜெயச்சந்திரன், சுவாமி நகர் ரமேஷ், ஹரி பிரசாத், ரங்கநகர் தாஸ், ரங்கா நகர் ரங்கநாதன், புவனேஸ்வரி, கற்பகம் சீனிவாசன், மஞ்சு விஜயா கணேஷ், நித்யா முடிச்சூர் சார்பில் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    No comments