முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி
அதிமுகவின் முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று முன்கூட்டியே கிளம்பிச் சென்றபோது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.நரம்பியல் பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்காக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
No comments