தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
No comments