மயிலாடுதுறை: ஏவிசி கல்லூரியில் புதிய சிமெண்ட் சாலை மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறப்பு
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வளாகத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக் கல்லூரியில் மயிலாடுதுறை, தஞ்சை திருவாரூர், கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்புகளை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் எளிதில் பயணிக்கக் கூடிய வகையில் சிமெண்ட் சாலையாக மாற்றியமைக்கபட்டது.
இதனை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே. வெங்கட்ராமன் ரிப்பன் வெட்டி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன், தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் மேஜர் ஜி. ரவிசெல்வம், துணை முதல்வர் எம். மதிவாணன், டீன் எஸ். மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குனர் எம்.செந்தில் முருகன், பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர் ஏ. வளவன், முதல்வர்கள் எஸ்.கண்ணன்,சி.சுந்தரராஜன் மற்றும் திரளான மாணவ மாணவிகள் பேராசிரியர்கள்,ஆசிரியர் இல்லாத பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments