• Breaking News

    அனகாபுத்தூர் தேமுதிக நிர்வாகி இல்ல நிகழ்ச்சி.... தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜய்காந்த் பங்கேற்பு


    பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் தேமுதிக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திற்கு செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் மற்றும் அனகாபுத்தூர் நகர செயலாளர் அனகை மகாதேவன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், பல்லாவரத்தில் இருந்து அனகாபுத்தூர் வரை தற்போது நான் வந்த சாலை மிகவும் பழுதடைந்து மோசமாக உள்ளது.

    இது குறித்து தேமுதிக சார்பில் சாலையை சீரமைக்கக்கோரி ஏற்கனவே போராட்டம் நடத்தி தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்தற்போது சாலையை சீரமைக்கமால் அரசு பேருந்து சேவை நிறுத்தி இருப்பது கடும் கண்டத்திற்குரியது.

    தமிழக அரசும், உடனடியாக சாலையை சீரமைத்து, பேருந்து சேவையை இயக்க வேண்டும். இல்லையென்றால் எனது தலைமையிலேயே விரைவில் அனகாபுத்தூரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டம் கழக துணை செயலாளர் மா.செழியன், தாம்பரம் தெற்கு பகுதி செயலாளர் கேட்.எம்.தர்மா, தாம்பரம் மேற்கு பகுதி செயலாளர் மார்க்கெட் ஞானப்பால், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஊடப்பாக்கம் எம்.ஜி.மூர்த்தி, பம்மல் பகுதி செயலாளர் டி.வின்சென்ட் உட்பட ஏராளமானோர் தேமுதிக நிர்வாகிகள்  மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    No comments