ஜார்க்கண்ட்: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து
ஜார்க்கண்டில் இன்று அதிகாலை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மும்பை- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதில் 6 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தை அடுத்து, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் அவ்வழியாக செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
No comments