பாஜக நிர்வாகி படுகொலை..... தப்பிக்க முயன்ற குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை

 

சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் பாஜக நிர்வாகி செல்வகுமார் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வசந்தகுமார், மருதுபாண்டி, அருண்குமார், சட்டீஸ்வரன், விஷால் ஆகியோர் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்‌. இந்நிலையில் இவர்கள் கொலை செய்வதற்காக பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்த இடத்தை காண்பிப்பதற்காக குற்றவாளிகளை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

அப்போது காவல்துறை ஆய்வாளர் பிரதாப்பை தாக்கிவிட்டு வசந்தகுமார் தப்பி ஓட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட மற்றொரு  போலீஸ் வசந்தகுமாரின் காலில் துப்பாக்கியால் சுட்டார். இதைத்தொடர்ந்து வசந்தகுமார் மற்றும் காவல்துறை அதிகாரி பிரதாப் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். மேலும் கொலை வழக்கு தொடர்புடைய குற்றவாளியை காவல்துறையினர் சுட்டு பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments