ஒரு நாள் ஆசிரியராக மாறிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
டெல்லியில் ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவின் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுடன் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒரு நாள் ஆசிரியராக மாறி மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் லட்சியங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பாடங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
புவி வெப்பமடைதல் குறித்து மாணவர்களுடன் உரையாடிய அவர், நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க அதிக மரங்களை நட வேண்டும் என்றும் அவர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார். அவர் மாணவர்களுடன் கலந்துரையாடிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
No comments