பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவில் மலை மேல் இருப்பதால் பக்தர்கள் செல்ல ஏதுவாக மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவைகல் போன்றவை அமலில் இருக்கிறது. இந்த ரோப் கார் சேவையில் செல்லும்போது பக்தர்களுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கிறது.
அதாவது இயற்கை அழகை ரசித்தபடி அதில் செல்லலாம் என்பதால் ஏராளமான பக்தர்கள் அதில் செல்ல விரும்புவார்கள். இந்நிலையில் ரோப் காரில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெறும் போது தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மாதாந்திர பராமரிப்பு வேலை நடைபெறுவதை முன்னிட்டு நாளை ரோப் கார் சேவை நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
No comments