வயநாடு நிலச்சரிவு..... தமிழக அரசு உதவி செய்ய தயார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை உள்ளிட்ட சில இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சித்தியுள்ள நிலையில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இருப்பினும் அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதோடு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு சம்பவத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவம் மிகுந்த வேதனையை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கேரளாவில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தமிழக அரசு உதவி செய்ய தயாராக இருக்கிறது என்றும் அறிவித்துள்ளார்.
No comments