கண் பார்வையை இழந்த வானம் பட நடிகை
நடிகர் சிம்புவுடன் இணைந்து வானம் திரைப்படத்தில் நடித்தவர்தான் பிரபல தொலைக்காட்சி நடிகையான ஜாஸ்மின் பாசின். இவர் கண் பார்வை இழந்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்ததால் தன்னுடைய கருவிழி பகுதி பாதிக்கப்பட்ட தன்னால் பார்க்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான் இந்த சிக்கலை எதிர்கொண்டதாக அவர் கூறினார். அவருடைய கருவிழி சேதம் அடைந்துள்ளதாகவும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
No comments