செங்கத்தில் குடிநீர் கிணற்றில் நாகப்பாம்பு.... தீயணைப்பு துறையினர் அலட்சியம்.....
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் தோக்கவடி கொல்ல கொட்டாய் விவசாய நிலத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் தவறி விழுந்த நாகப்பாம்பு கடந்த மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் கிணற்றின் கரை ஓரமாக நீந்தி வருகின்றன இதைக் கண்ட அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும் இதுவரையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள் மேலும் இந்தப் பாம்பு கிணற்றில் இறந்து விட்டால் குடிநீர் விஷயமாக மாற அபாயம் உள்ளது என்று குடியிருப்பு வாசிகள் பயத்தில் அச்சமடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்தியாளர் S. சஞ்சீவ்.
No comments