• Breaking News

    சரிடா நாயே.... மின்சார வாரியத்தை வம்பிலுத்த 'கிங்'

     


    தமிழகத்தில் 4.83 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ள நிலையில் 100 யூனிட்டுக்கான இலவசம் மின்சாரம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கு அதிகமான பயனாளிகள் 100 யூனிட்டுக்கு குறைவாகவே மின்சாரத்தை பயன்படுத்தி வருவதால் அவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் “சாரிடா நாயே மாதம் ஒருமுறை மின்கட்டணம் நடைமுறை எப்ப அமலுக்கு வரும்”? என்று நபர் ஒருவர் தமிழக மின்சார துறை X தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதால் மின்சார வாரியம் பதிலுக்கு, நீங்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி நீங்கள் எங்களை நடத்த வேண்டும்.

    எங்களை அசிங்கமாக, மோசமாக மற்றும் தவறான வார்த்தைகளில் பேசும் நபர்களுக்கு சேவை வழங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று மின்சார வாரியம் பதிலடி கொடுத்துள்ளது. தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    No comments