நானும் நடாஷாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் - ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா கடந்த மாதம் நடந்த ஐபிஎல் தொடரின் போது கடுமையான மன உளைச்சலில் காணப்பட்டார். அப்போதே அவர் தனது மனைவியை பிரிவதாக பேசப்பட்டது. மற்றொருபுறம் மும்பை அணியில் ரோகித்துக்கும் அவருக்குமான மோதலால் தான் அவர் அப்படி இருப்பதாக கூறப்பட்டது.
தொடர்ந்து உலக கோப்பையை வென்று கொடுத்த அவர் ஜிம்பாவே இலங்கை தொடரில் இருந்து விலகி தற்போது தனிமையில் நாட்களை கழித்து வருகின்றார்.இந்த நிலையில் இவர் தனது மனைவியை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார். நடாஷா என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் தனது விவாகரத்து முடிவு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நானும் நடாஷாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்த கடினமான நேரத்தில் தங்களது தனி உரிமையை மதித்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments