எச்ஐவி-க்கு வந்துவிட்டது ஊசி மருந்து..... சோதனை வெற்றி என ஆராய்ச்சியாளர்கள் தகவல்
எச்ஐவி தொற்று என்பது மற்ற நோய்களை விட கொடியது. இதனால் வருடம் தோறும் உயிரிழப்பவர்கள் ஏராளம். எனவே எச்ஐவி தொற்றிலிருந்து மனிதர்களை பாதுகாப்பதற்காக ஒரு ஊசி வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில் அதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஊசி மருந்தின் சோதனைகள் வெற்றி அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த லெனகாபவீர் ஊசியை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் வருடத்திற்கு இரண்டு முறையும் கொடுப்பதன் மூலமாக இளைஞர்களை எச்ஐவி தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்பது இந்த பரிசோதனையின் மூலம் தெளிவாகின்றது. மேலும் இந்த ஊசியை அனைவருக்கும் கிடைக்க செய்ய முயற்சிப்பதாக கிலியட் சயின்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments