போனில் பேசுவதை தவிர்த்த பெண்ணை கொலை செய்த 'பிறர் மனைவி பிரியர்'

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் நாகலட்சுமி (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக பீமராஜ் என்பவருடன திருமணம் நடைபெற்ற நிலையில் சம்பிரீத் ராஜ் (3) என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நாகலட்சுமி அவருடைய உறவினரான ராஜபாண்டி (26) என்பவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்த நிலையில் இந்த விவகாரம் பீமராஜுக்கு தெரிய வரவே அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் நாகலட்சுமி அவருடன் போனில் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகறாறு ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நாகலட்சுமி தன்னுடைய மகன் மற்றும் உறவினரான பிரியதர்ஷினி  ஆகியோருடன் ஒரு வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ராஜபாண்டி வந்தார். அவர் நாகலட்சுமி, பிரியதர்ஷினி மற்றும் குழந்தை ஆகிய 3 பேரையும் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

இவர்கள் சிறிது தூரம் சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பிரியதர்ஷினி மற்றும் குழந்தையை ராஜபாண்டி இறக்கி விட்டார். பின்னர் நாகலட்சுமியை காட்டுப்பகுதிக்குள் தனியாக அழைத்து சென்றார். சிறிது நேரம் கழித்து ராஜபாண்டி மட்டும் தனியாக வந்தார். அப்போது அவரிடம் ‌ நாகலட்சுமி எங்கே என்று பிரியதர்ஷினி கேட்டபோது காட்டுக்குள் சடலமாக கிடைப்பதாக கூறியுள்ளார். உடனடியாக அங்கு சென்று பிரியதர்ஷினி பார்த்தபோது அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக காரியாபட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நாகலட்சுமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

0 Comments