• Breaking News

    குளியலறை வீடியோ வெளியானதால் அதிர்ச்சியான தி லெஜெண்ட் பட நடிகை

     

    பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுதாலா. இவர் தமிழில் தி லெஜண்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது குஸ் பைதியே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஊர்வசியின் குளியலறை வீடியோ ஒன்று வெளியாகிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோவுக்கு தற்போது நடிகை ஊர்வசி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அந்த வீடியோவை பார்த்து நான் மிகவும் வருத்தம் அடைகிறேன். அது என்னுடைய தனிப்பட்ட வீடியோ கிடையாது. எந்த ஒரு பொண்ணும் இப்படிப்பட்ட வீடியோவை நிச்சயம் வெளியிட மாட்டார். அது நான் நடிக்கும் படத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இதற்கு முன்னதாக இது போன்ற எனது வீடியோக்கள் வெளியானது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

    No comments