புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும்.... வெளியானது அறிவிப்பு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு புதிய ரேஷன் கார்டுகள் பெறுவதற்காக ஏராளமானோர் தமிழகத்தில் விண்ணப்பித்திரிந்த நிலையில் புதிய கார்டுகள் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் நிலவியது.இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் தமிழகத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டுகள் பெறுவதற்கு 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments