தற்காலிகமாக வாங்கிய பைக்கை விற்று பணம் பார்த்த வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு அருகே தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் (23) என்ற மகன் இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் இருசக்கர வாகனத்தை தற்காலிகமாக பெற்றுக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதையடுத்து இவர் சிலரிடம் தற்காலிகமாக வாங்கிய இருசக்கர வாகனத்தை அவர்கள் திரும்பக் கேட்டபோது கொடுக்காமல் அதை யாரோ திருடிச்சென்று விட்டனர் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ் என்பவரிடம் அபிஷேக் இருசக்கர வாகனத்தை தற்காலிகமாக வாங்கியுள்ளார். பின்னர் ஏசுதாஸ் அவரிடம் தன்னுடைய இருசக்கர வாகனத்தை திரும்ப கேட்டபோது அபிஷேக் அதனை கொடுக்க மறுத்துள்ளார். ஆகையால் சந்தேகம் அடைந்த ஏசுதாஸ் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அபிஷேக்கை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த இருசக்கர வாகனத்தை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கடையில் விற்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மார்த்தாண்டத்திற்கு சென்று ஏசுதாஸின் இருசக்கர வாகனத்தை மீட்டனர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அபிஷேக்கை கைது செய்தனர்.
No comments