• Breaking News

    சென்னையில் மழை வெள்ளம் தேங்கினாலும்,உடனே அப்புறப்படுத்துவோம் - மேயர் பிரியா

     

    சென்னை ரிப்பன் மாளிகையில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாவை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

    "சென்னையில் இந்த ஆண்டு இரவு நேரங்களில் பரவலான மழை பெய்து வருவதால், அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரின் ஏதாவது ஒரு பகுதியில் கொசு மருந்து தெளிக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டால், உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மழை வெள்ளம் தேங்கினாலும், அதை உடனே அப்புறப்படுத்துவோம் என்ற உத்தரவாதத்தை மாநகராட்சி அளிக்கும்."

    இவ்வாறு மேயர் பிரியா தெரிவித்தார்.

    No comments