• Breaking News

    திருச்சி மத்திய சிறையில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்

     

    திருச்சி மத்திய சிறையில் 1600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 836 பேர் தண்டனை கைதிகளாக உள்ளனர். அதில் திருச்சியை சேர்ந்த திருநங்கை ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபி1 அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த சிறையில் இருந்த காவலர் ஒருவர் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து திருநங்கை உயர் அதிகாரிகளிடம் சென்று புகார் கொடுத்தார். 

    ஆனால் அவர்கள் மாரீஸ்வரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதைத்தொடர்ந்து திருநங்கை கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நிலையில் அங்குள்ள சட்டப் பணிகள் ஆணையத்தில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நீதிபதிகள் சிறையில் உள்ள சிசிடிவி யின் மூலம் திருநங்கை கூறியது உண்மை என உறுதிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மத்திய சிறை கூடுதல் டிஜிபி மகேஷ் வர்தயாள், காவலர் மாரீஸ்வரன்  உட்பட சில அதிகாரிகள்  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

    No comments