கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியதை கண்டித்த மனைவி..... விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட கணவன்.....

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் மகாலிங்கம் காலணியை சேர்ந்த ஜவஹர் மகன் மணிகண்டன் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே மணிகண்டனுக்கு அப்பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாற இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். மணிகண்டனின் ரகசிய உறவு பற்றி வீட்டுக்கு தெரிய வர, மணிகண்டன் தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி சேலத்திற்கு சென்றுள்ளார்.

மணிகண்டனின் கள்ளக்காதலின் உறவினர்கள் எடப்பாடி அருகே வளைய செட்டியூர் என்ற பகுதியில் வசித்து வரும் நிலையில் இருவரும் அங்கு தங்கியுள்ளனர். இந்த நிலையில் கணவர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவரஞ்சனி உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். பிறகு சேலத்தில் தங்கி இருப்பதை அறிந்து அங்கு சென்ற சிவரஞ்சனி மணிகண்டனை தன்னோடு வரும்படி கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் கள்ளக்காதலை கண்டித்துள்ளார். அங்கிருந்து உடனே வெளியேறிய மணிகண்டன் பூலாம்பட்டி அருகே வாய்க்கால் கரை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ள காதலியுடன் குடும்பம் நடத்தியதை மனைவி கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments