• Breaking News

    புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் பிரம்மாண்டமான மக்கள முதல்வர் திட்டம் முகாம் டி.ஜெ.கோவிந்தராஜ் எம்.எல்.ஏ பங்கேற்பு


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புது கும்மிடிப்பூண்டியில்,அயநல்லூர்,பாத்தபாளையம்,எஸ்.ஆர்.கண்டிகை,சிறுபுழல்பேட்டை,ஏனாதிமேல்பாக்கம் புது கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கான மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான டிஜே கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரசேகர் முன்னிலை வகித்தார். 

    நிகழ்ச்சியில் அரசு துறை சார்ந்த 17 துறைகள் சார்பான கோரிக்கை குறித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.இதில் சேர்மன் சிவகுமார், துணை சேர்மன் மாலதி குணசேகரன், புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஸ்வினி சுகுமார், சித்தராஜா கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாமுரளி, அயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கல்விச்செல்வன், புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எல்லப் பன் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற செயலாளர் சிட்டிபாபு, ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சி மன்ற செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அயநல்லூர் ஊரா ட்சி மன்ற தலைவர் லலிதா கல்வி செல்வன் ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில் பழுதடைந்துள்ள 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியை இடித்து புதியதாக கட்டி தருமாறு கோரிக் கை மனு அளித்தார், மேலும் சித்த ராஜா கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா முரளி தனது ஊராட்சி க்கு பல்வேறு கோரிக்கை குறித்து மனு அளித்தார்.

    No comments