சென்னை வாசிகளுக்கு ஷாக்.... தொழில் வரியை உயர்த்த மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்.....
சென்னை மாநகராட்சியில் தொழில் வரியை 35 சதவீதம் உயர்த்தவும் இதற்கு அரசு ஒப்புதல் வழங்கவும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில்வரி விகிதங்கள் திருத்தி அமைக்கலாம் என்றும் அத்தகைய திருத்தம் 25 சதவீதத்திற்கும் குறைவில்லாத வகையிலும் 35 சதவீதத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். தொழில் வரி விகிதம் 2500 ரூபாய்க்கு மிகவும் இருக்க வேண்டும் என்று விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது உள்ள அட்டவணை தொகையில் 35 சதவீதம் தொழில் வரி உயர்த்துவதற்கு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி உயர்த்தப்பட்ட புதிய வரி பட்டியல்,
மாத வருமானம் ரூ.21,000க்குள் இருந்தால் வரி உயர்வு இல்லை
வருமானம் ரூ.21,000 – 30,000 : வரி ரூ.135-லிருந்து ரூ.180 ஆக உயர்வு
வருமானம் ரூ.30,000 – 45,000 : வரி ரூ.315லிருந்து ரூ.430 ஆக உயர்வு
வருமானம் ரூ.45,000 – 60,000 : வரி ரூ.690-லிருந்து ரூ.930 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
No comments