• Breaking News

    கும்மிடிப்பூண்டி கேஎல்கே அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மூன்றாம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கே எல் கே அரசு மேல்நிலைப்பள்ளியில் 1987, ஆம் ஆண்டு 10, வகுப்புபடித்த முன்னாள் மாணவ மாணவிகள் மூன்றாம் ஆண்டு சந்திப்பு விழா கும்மிடிப்பூண்டி ஏ ,வி, எஸ், மஹால் நடைபெற்றது.

     இதில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர், கே, சுப்பிரமணி ரெட்டி, பங்கேற்று,2024,ஆம் ஆண்டு 10 வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்கள்.நிகழ்ச்சி ஏற்பாடு முன்னாள் மாணவ,மாணவிகள் செய்திருந்தனர்.

    No comments