• Breaking News

    பெண் பயிற்சி டாக்டரை திருமணம் செய்துகொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்த உடன் பணியாற்றிய டாக்டர்

     

    கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இளம் பெண் ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த இளம் பெண் ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார். இவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நான் வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படித்தேன். அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு ஊட்டியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக சேர்ந்தேன்‌. அப்போது அங்கு மருத்துவராக வேலை பார்க்கும் ஷியாம் சுந்தர் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய நிலையில் அவருடன் காரில் பல்வேறு இடங்களுக்கு சென்றேன். அப்போது காரிலேயே இருவரும் உல்லாசமாக இருந்தோம். அவர் எனக்கு கணவராக வரப்போறவர் என்பதால் நான் அதற்கு சம்மதித்தேன்.

    அவர் பணி மாறுதல் காரணமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்றார். நானும் பயிற்சி முடிந்த பிறகு கோவைக்கு சென்று விட்டேன். அதன் பிறகும் நாங்கள் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்ற நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஒரு ஹோட்டலில் கணவன்-மனைவி என்று பதிவு செய்து அறை எடுத்து இருவரும் உல்லாசமாக இருந்தோம். அதன் பிறகு என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் நான் கூறியதால் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு தான் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதைப் பற்றி அவருடைய குடும்பத்தாரிடம் நேரில் சென்று கூறிய போது அவர்கள் என்னை திட்டி அனுப்பி விட்டனர். என்னை ஏமாற்றிய ஷியாம் சுந்தர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    No comments