கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் ஊராட்சியில் புனித மரியன்னை தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு பள்ளி மாணவருக்கு காலை உணவு வழங்கினார்
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 3,995 பள்ளிகளில் இன்று தொடங்கப்பட உள்ளது. காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . இதன் மூலம் 2,23,556 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்படும் சூழலில், தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 11 அரசு பள்ளிகளில் இன்று தொடங்கப்பட்டது.
இதில் ஆரம்பாக்கம் ஊராட்சி உள்ள புனித மரியன்னை தொடக்கப்பள்ளியில் கலந்துகொண்டு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கி தானும் அமர்ந்து உணவு அருந்தினார்.இதில் வபட்ட வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் அமிர்தமன்னன் சேர்மன் கே எம் எஸ் சிவகுமார் பொதுக்குழு உறுப்பினர் பா.செ குணசேகரன் ஒன்றிய செயலாளர் மணிபாலன் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் மாவட்ட நகர செயலாளர் அறிவழகன் கவுன்சிலர்கள் ராமஜெயம் சாரதா முத்துசாமி மாவட்ட பொருளாளர் ரமேஷ்கோவில் அறநிலை உறுப்பினர் லட்சுமி நாராயணன் கவுன்சிலர்கள் மெய்யழகன் மீனவரணி ஆறுமுகம். மஸ்தான். மானநல்லூர் மனோகரன் ரவிதுணைத் தலைவர் சிலம்பரசன் மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments