தேனி மாவட்டம் உத்தமபாளையம் இந்து முன்னணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
தேனி தெற்கு மாவட்ட இந்துமுன்னணி செயற்குழு கூட்டம் உத்தமபாளையம் நகரில் கலைமகள் மீட்டிங் ஹாலில் மதுரை கோட்ட செயலாளர் கோம்பை.கணேசன் தலைமையில் மாவட்ட தலைவர் V.சுந்தர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில செயலாளர் வழக்கறிஞர் S.முத்துக்குமார் அவர்கள் சிறப்புறையாற்றினர் .
வருகின்ற ஜுலை 21 ம்தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.மற்றும் குச்சனூர் சனீஸ்வரபகவான் திருக்கோவில் ஆடி திருவிழாவை நிறுத்திய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
கூட்டத்தில் மாநில பேச்சாளர் R.S.ராமகிருஷ்ணன் மாவட்ட பொதுசெயலாளர் R.பாலமுருகன் மாவட்ட செயலாளர்கள் K.கணேஷ்குமார்,S.சசிக்குமார் HYF மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்.செல்வா மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
No comments