• Breaking News

    செங்கல்பட்டு: தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினார்கள்


    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் ஜூலை 18ல்  பிறந்தநாள் விழா காணும் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் மின்னல் வி.குமார் அவர்களின் வழிகாட்டுதல்படி பம்மல் தெற்கு பகுதி தலைவர் பம்மல் ஏ.கண்ணன் அவர்களின் தலைமையில் பம்மல் தெற்கு பகுதி 7வது வட்ட தலைவர் ஆர்.அருண்குமார் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் 100 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் பம்மல் தெற்கு பகுதி தலைவர் பம்மல் ஏ.கண்ணன், செயலாளர் ஜெகதீசன், 10 வது வட்ட தலைவர் நவீன்ராஜ், செயலாளர் பிரகாஷ், தளபதி துரை, ஹரிபிரசாத் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments